முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 2018

Turn Off Light
Auto Next
More
Watch Later
Report

Report


Descriptions:

ஈழப் போரின் இறுதி நிமிடங்களின் வரலாற்றை சுமந்து மௌனமாக அசைந்து கொண்டிருக்கின்றது முள்ளிவாய்க்கால். துள்ளி எழுந்த அலைகள் துயரை சொல்ல முடியாது மெல்ல நகர்ந்து கொண்டிருக்கின்றன.

மே 18 என்றதுமே பல ஆயிரக்கணக்கான உயிர்களின் இரத்தம் தேய்ந்த வரலாறுதான் கண் முன் தேன்றுகின்றது. முள்ளிவாய்க்கால் படுகொலை ஈழத்தமிழர்களின் இரத்தச்சக்தியால் வரையப்பட்ட மறக்க முடியாத சோகம்.

எத்தனையோ உறவுகளை இழந்தும், வலிகளையும் சுமந்தும் ஈழத்தமிழன் பல நாடுகளில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.

கடந்த 2009 மே 18ஆம் திகதி முடிவுக்கு வந்த போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

ஈழத்தமிழர்கள் எதிர்கொண்ட இந்த மாபெரும் இனப்படுகொலைகளை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வுகள் உலகம் முழுதும் இன்று கண்ணீருடன் தமிழர்களால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

போர் கொடூரமானது, ஆனால் உலக இனங்கள் தமது உரிமைகளை போராடியே பெற்றன. இதற்கு தமிழனும் விதிவிலக்கல்ல. தமிழர்கள் தமது உரிமைகளை போராடியே பெற்றனர். உலக வரலாற்றில் தமிழன் பல்லாயிரம் போர்களை சந்தித்திருக்கிறான்.

Leave your comment

Your email address will not be published. Required fields are marked *